நாய் ஒன்னுக்கு போகும்போது மரத்து மேலயோ இல்ல லேம்ப் போஸ்ட்மேலயோ ஏன் ஒரு கால தூக்கி வச்சிக்கிட்டு போகுதுன்னு ரொம்ப நாளா ஒருசந்தேகம். நாம என்ன செண்பக பாண்டியனா? சந்தேகத்தை யாராவது தீர்த்துவச்சா பொற்காசு தரேன்னு அறிவிக்க முடியுமா?
நண்பர்கள் கிட்ட கேட்டு பார்த்தேன்... என்னை ஒரு மாதிரியா பாத்தனுங்க. ஒருத்தன் சொன்னான்... அப்படியே நின்னு போனா நாயோட கால்ல யூரின் படும்அதனால தான்னு. அப்படி பார்த்தா ஒரு கால மரத்து மேல வச்சி யூரின் போகும்போது மத்த கால்ல படுமேன்னு என் சந்தேகத்தை கிளப்பினேன்... கொஞ்சம்அவசர வேலை இருக்கு அப்புறம் பாக்கலாம்னு போனவன் ஆளயே காணோம்.
இந்த சந்தேகத்தால நண்பர்கள் எல்லாம் என்னை பார்த்தாலே ஓடவே... நானேமோட்டுவளைய ரொம்ப நாளா பாத்து விடைய கண்டு பிடிச்சிட்டேன். அது என்னன்னா...
நாய் அறிவுள்ள பிராணி அதுக்கு எச்சரிக்கை உணர்வும் அதிகம் அதானால... ஒன்னுக்கு போகும்போது மரமோ இல்ல லேம்ப் போஸ்ட்டோ அது மேலவிழுந்திடாம இருக்கத் தான் ஒரு கால தூக்கி மரத்து மேலயோ இல்ல லேம்ப்போஸ்ட் மேலயோ சப்போர்ட்டுக்கு வச்சிக்கிட்டு ஒன்னுக்கு போகுது...
(ஹலோ இதுக்கெல்லாம அடிக்க வருவாங்க புடிச்சிருந்தா ஓட்டு போடுங்க இல்லைன்னா இதுக்கு மேல கடி வரும் உஷாரா இருங்க)
