நித்தியானந்தரை பற்றிய என்னுடைய முந்திய பதிவை எழுதிய பின் மனதில் ஒரு சிறு நெருடல், சுமை, ம் … ஏதோ ஒன்று. காரணம், நித்தியானந்தரை பின் பற்ற ஆரம்பித்தவர்களில் (நல்ல வேளை இரண்டு மாதமாகத்தான்) நானும் ஒருவன். தற்ச்சமயம் எல்லோரும் அவரை பற்றியே எழுதுவதால், அவரை பற்றி எழுதுவதற்க்கு தயக்கமாக இருந்தது அதையும் மீறி எழுதிவிட்டேன். சரி விஷயத்திற்க்கு வருவோம்.
இரண்டு மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் நித்தியானந்தரின் இரண்டு நாள் தியான வகுப்பில் கலந்து கொண்டேன். தியான வகுப்பை ஏற்ப்பாடு செய்திருந்த விதமும், அங்கு சேவை செய்தவர்கள் மரியாதையாக நடந்து கொண்ட விதமும், தியான வகுப்பும் நன்றாகத்தான் இருந்தது. அப்போதே பிப்ரவரி 14 ஆம் தேதி நடக்கும் கல்பதருவிற்க்கான (கல்பதரு என்றால் வேண்டும் வரங்களை அளிப்பது) விளம்பரமும் செய்தார்கள்.
என் அம்மா கேன்சர் நோயால் கஷ்ட்டப்படுவதால் நோயின் வீரியமாவது அவரது ஹீலிங் மூலமாக குறையுமா என்ற எதிர்ப்பார்ப்பில், நானும், என் குடும்பத்தில் உள்ள அனைவரும் கல்பதருக்கு போனோம். பெண்கள் சந்தன கலர் உடையில் தரிசனதிற்கு வந்தால் நல்லது என்று சொன்னதால் (அப்போது தான் சக்தியை ரிசீவ் பண்ண முடியுமாம்). மனைவிக்கு சந்தன கலர் சுடிதாருக்காக முந்தின நாள் இரவு 10 கடைகளுக்கு மேல் தேடி ஒரு சந்தன கலர் சுடிதாரும் எடுத்து வந்தேன். 7 மணிக்குள் அங்கு இருக்க வேண்டும் என்பதால் 5 மணிக்கெல்லாம் தூங்கி கொண்டிருந்த குழந்தையெல்லாம் பாதி தூக்கதில் எழுப்பி ஒரு வித பதட்டத்துடனே கிளம்பி சென்றோம்.
கல்பதரு நிகழ்ச்சியிலும் நித்யானந்தர் மேடைக்கு வரும் வரை எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. என்னவோ தெரியவில்லை அவர் மேடைக்கு வந்த பிறகு அவரை பற்றி அவரது சீடர்கள் பில்ட அப் செய்து வைத்திருந்த அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
1. முதலில் அவர் மேடையில் தோன்றும் போது பின்னனியில் ஒலித்த பாட்டு அதிரவைத்தது. அந்த நிகழ்ச்சியில் ஒலித்த அத்தனை பாடல்களும் அவரைப்பற்றியே இருந்தது மேலும் அத்தனையும் குத்து பாடல் வடிவில் இருந்தது. இது போன்ற நிகழ்ச்சிகளில் மனதை வருடும் சாந்தமான இசையை எதிர்ப்பார்த்தேன் ஏனென்றால் அங்கு வந்திருந்தவர்களில் நிறைய நோயாளிகள் இருந்தார்கள்.
2. அவர் பேசும் போது சில கதைகளை கூறினார் அவை ஏற்கனவே பல புத்தகங்களில் வந்த காமெடி கதைகள் ஆனால் அதை அவர் நேரில் பார்த்தது போல் கூறியதில் சிறிது பொய் கலந்திருந்தது (பட்டி மன்றங்களில் தான் அப்படி பேசுவார்கள்).
3. கல்பதரு நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் அந்த நிகழ்ச்சியின் போது யாரும் பேசக்கூடாது என்றும் எந்த சப்தமும் இருக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது ஆனால் கல்பதரு நடந்து கொண்டிருக்கும் போது ஆண்களும் பெண்களும் (தனித்தனியாகத்தான்) ஆடிய ஆட்டமும் அதற்காக போடப்பட்ட குத்து பாடல்களும் காதை கிழித்தது (ஆட்டமும்,பாட்டும் நன்றாக இல்லை).
4. ஆசி வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. அதிகம் பணம் கொடுத்தவர்களுடன் நிறைய நேரம் பேசினார். எங்களை போன்ற குறைவான பணம் (1000 ரூபாய்) கொடுத்தவர்கள் கூறியதை காதில் வாங்கியது போல் தெரியவில்லை அதற்குள் அவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சீடர்கள் திருப்பதியில் தள்ளி விடுவார்களே அது போல் தள்ளி விட்டு விட்டார்கள்.
5. எல்லாவற்றிற்க்கும் மேல் அவரின் சீடர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு கட்டியணைத்து அவர் ஆசி வழங்கிய விதம் சரியில்லை. என்னதான் சாமியாராக இருந்தாலும் பெண்களை கட்டியணைத்து ஆசி வழங்குவது தேவையில்லாதது என்று திரும்பி வரும் போதே நாங்கள் பேசி கொண்டு வந்தோம். இப்போது யோசித்து பார்த்தால் இப்படிப்பட்டவர் எந்த வித விகல்ப்பமும் இல்லாமல் பெண்களை கட்டிப்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை.
Tuesday, March 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
முதல் தங்கள் தாயாருக்குப் புற்று நோயில் இருந்து ஆறுதல் கிடைக்க வேண்டுகிறேன். இனிமேலாவது
ReplyDeleteநீங்கள் எந்த மனிதனிடமும் தெய்வீகம் இருக்கென அலைய மாட்டீர்கள் என நம்புகிறேன்.
கடைசி பத்தியைப் படித்தபோது சிரிப்பே வந்தது. இப்படி ஒவ்வொருவர் மாற்றமே இனிமேல் காவிகளே
இல்லாத நாட்டுக்கு உத்தரவாதம்.
how is your mom now
ReplyDeletenow u regret about that mater isit? y dont u think before going that place ? because that time u lose u r brain now u wake up isit .....fool peoples.u believe u r self first then do dhiyanam u get it everything stupid
ReplyDeleteஉங்களை போல் நல்ல உள்ளங்களின் பிரார்த்தனையால் மட்டுமே இது போன்ற நோய்களுக்கு ஆறுதல் கிடைக்கும். நன்றி திரு.யோகன்
ReplyDeleteபெயர் தெரியாத அந்த நண்பருக்கு... Truly speaking My amma is not good. I've enough money to spend but...(useless docs)
ReplyDeleteஅன்னைக்காக - ஓர்
ReplyDeleteஅயோக்கியனிடம்
அடிபணிந்தீர்கள்.....
தாயின் நோய் மட்டுமே...
தங்களுக்கு முதன்மையாய் தெரிந்தது...
தப்பில்லை... நண்பரே....
'உப்பை தின்னவன் (சாமியார்தான்)
தண்ணீ குடித்துதான் தீரவேண்டும்'
இது இயற்கை நியதி..
அந்நோயின் ருத்ரம் நான் அறிந்ததுதான்...
என் நெருங்கிய உறவினரை நெருங்கி பார்த்ததினால்...
நான்
'சாமி'களை நம்புவன்...
'அசாமி'களை அல்ல...
தங்கள் அன்னையார்
பூரண நலமடைய
தங்களுடன் சேர்ந்து
நானும் வேண்டுகிறேன்... எல்லாம் நலமாய்..
நட்புடன்...
காஞ்சி முரளி.........
தங்களின் பின்னூட்டம் கண் கலங்க வைத்தது. மிக்க நன்றி, திரு. காஞ்சி முரளி.
ReplyDeleteஎன்ன செய்வது, சில விஷயங்களை அறிவு பூர்வமாக அனுக முடிவதில்லை. கருத்திற்க்கும் வருகைக்கும் நன்றி Mr. Shivaraje.
ReplyDeleteHi,
ReplyDelete/முதலில் அவர் மேடையில் தோன்றும் போது பின்னனியில் ஒளித்த பாட்டு அதிரவைத்தது/
Was it light or Sound?
I too pray to god to keep your mom in sound health.
As Mr Kanchi murali commented, let us pray directly to god, try not to keep any mid-agent between us.
Your narration style is good. Try to get a leaf or two from Sujata's. It will help you improve further.
By the way, have you ever met Actor ragasudha / Ranjitha in Nithyananda's enclave?
(Just for an information, since we read a lot about these yesteryear ladies in media)
All the best
Your colleague.
Hi poongatru,
ReplyDeleteCongrats!
Your story titled 'நித்தியானந்தர் – ஓர் அனுபவம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 16th March 2010 01:28:01 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/204854
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.