”ராஜாராமா... எனக்கு பெண் குழந்தை பொறந்திருக்குடா...”
”அப்படியா...ரொம்ப சந்தோஷம்டா...”
”அட நீ வேற... நானே பொண்ணு பொறந்துடுச்சுன்னு கவலைப் பட்டுட்டு இருக்கேன்...”
”டேய் நீ ராஜா டா...”
”என்ன சொல்ற...?”
”ஆமான்டா... பொண்ண பெத்தவன் ராஜாடா... வேணும்னா இன்னொரு பொண்ண பெத்துக்கோ ராஜாதி ராஜாவாயிடுவே.”
”நீ புள்ளய பெத்துட்டு என்ன கிண்டல் பண்றீயா...?”
”கிண்டல் பண்ணலடா... உண்மையத் தான் சொல்றேன்... புள்ளைய பெத்த அப்பா, அம்மா ஏர்போர்ட் வரைக்கும் தான்... ஆனா பொண்ண பெத்த அப்பாவும் அம்மாவும் அமெரிக்கா, லண்டன்னு Foreign லாம் போலாம்...”
”குழப்புறீயே...”
”ஒரு பேச்சுக்கு எடுத்துக்குவோம், என் பையனுக்கு இப்ப அஞ்சு வயசு ஆகுது... அவனை இஞ்சினீரிங் படிக்க வைக்கீறேன்னு வச்சுக்குவோம்... இஞ்சினீரிங் படிச்சிட்டு என்ன பண்ணுவான்... MS படிக்க அமெரிக்கா பொறேன்னு சொல்லுவான் நானும் என் சேமிப்பெல்லம் சுரண்டி MS படிக்க அமெரிக்கா அனுப்பி வைப்பேன்... போய்ட்டு திரும்பி இங்க வருவானா... வரமாட்டான்....அங்கேயே ஒரு வேலைய பாத்து செட்டில் ஆயிடுவான். சரி கழுதை எங்கே இருந்தாலும் நல்லா இருந்தா சரின்னு.... உன் பொண்ண என் பையனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறோம்ன்னு வச்சிக்குவோம்...”
”அட இப்பத் தான் குழைந்தை பொறந்திருக்கு அதுக்குள்ள சம்மந்தி ஆக்கிட்டியே...”
”டேய்... நீயோ என் பக்கத்து வீட்டுக்காரன், என் சினேகிதன் வேற... என் பையன் அமெரிக்கால செட்டில் ஆயிட்டான்னா விட்டுறுவியா... விட்டுட்டேன்னு வை நீயும் வேஸ்ட் உன் பொண்ணும் வேஸ்ட். என்ன சொல்லிட்டிருந்தேன்.... ம்... கல்யாணம் செஞ்சு வைக்கிறோம்ன்னு வச்சிக்குவோம்... இப்ப உம் பொண்ணு ஈஸியா அமெரிக்கா போயிடுவா... அப்ப வழியனுப்ப நாம எல்லாம் ஏர்போர்ட் போறமே அவ்வளவு தான் எங்களுக்கு. போறவ சும்மா இருப்பாளா...? மூனு மாசம் கழிச்சு நான் மாசமா இருக்கேன் துணைக்கு அம்மாவை இங்க அனுப்பி வையுங்கோன்னு... உன் பொண்டாட்டிய அமெரிக்கா வரச் சொல்லுவா... மாமியார அனுப்பி வையுங்கோன்னு... என் பொண்டாட்டிய வர சொல்லுவாளா என்ன...?”
”டேய் என்னடா சொல்றே...”
”நடக்குறத தான்டா சொல்றேன்...உன் wife ம் ஜம்முன்னு அமெரிக்கா போயிடுவாங்க. இப்ப குழந்தை பொற்ந்திடுச்சின்னு வச்சிக்குவோம். என் பையன் என்ன பண்ணுவான்... குழந்தையோட போட்டாவை எங்களுக்கு அனுப்பிட்டு, அத்தையால தனியா பாத்துக்க முடியல மாமாவை இங்க வர சொல்லுங்கன்னு சொல்லுவான்... உன் பொண்டாட்டிய விட்டுட்டு தனியா இருக்க முடியாம உன் பொண்ணு மூலமா இந்த மாதிரி டகால்ட்டி வேலை செய்யாமலா இருப்பே. So இப்ப நீயும் அமெரிக்கா கிளம்பி போயிடுவே... அங்க போய் ஜீன்ஸ், ஜெர்கின்னு போட்டுட்டு கலக்குவே. நாங்க இங்க இருந்துட்டு எந்த முதியோர் இல்லம் வசதியா இருக்கும்னு பேப்பர பார்த்துட்டு இருப்போம். இப்ப புரிஞ்சுதா... பொண்ண பெத்துட்டோம்னு கவலை படாம சந்தோஷமா இரு. கவலைப்பட வேண்டியது புள்ளய பெத்தவஙக தான்.”
”யப்பா... சத்தியமா என் பொண்ண உன் புள்ளைக்கு கட்டி கொடுக்க மாட்டேன்டா.”
Saturday, March 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
என் மனைவி கற்பமாக இருக்கும் பொழுது நண்பர்கள் சிலர் என்னிடம், பெண் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சியா அல்லது ஆண் குழந்தை மகிழ்ச்சியா என்று கேட்ப்பர். உண்மையில் நான் அப்பொழுது யொசித்து பார்த்து ஆறோக்கியமான குழந்தை வேண்டுமென்று சொல்வேன். நான் இன்று சொற்கத்தில் மிதக்கின்றேன்.
ReplyDeleteமாடு,மனைவி,வீடு,மக்கள் இதெல்லாம் அமையுறது தான் அமையுன்னு எங்க அப்பா சொல்வாரு.
ReplyDeleteதங்களின் கருத்திற்க்கும் வருகைக்கும் நன்றி. திரு. சுனாபானா. அனுபவசாலிகள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
ReplyDeleteTrue. Good and practical one.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம்...உங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி. தொடரட்டும் உஙகள் கருத்து.
ReplyDeleteஎன் தோழி சொல்லியிருக்கிறாள்.”பொண்ணைப் பெத்தவங்கதான் குடுத்து வச்சவங்க.யாரோ ஒரு ஏமாளி ப்பெற்றோர் பையனை வளர்த்து கஷ்டப்பட்டு படிக்க வச்சு,சேமிப்பைச் சுரண்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வச்சிருப்பாங்க.....நாம போய் ஒரே ’லபக்’...பையன் நம்ம வீட்டு மாட்டுப்பையன்
ReplyDelete//”பொண்ணைப் பெத்தவங்கதான் குடுத்து வச்சவங்க// ஊரறிந்த உண்மை.
ReplyDelete