Wednesday, February 10, 2010

லேட்டாயிடுச்சி

பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு அசெம்ப்ளி ஷாப்ல 25 பேர் கொண்ட ஒரு குருப்க்கு நான் இன்சார்ஜா இருந்தேன். சாதரணமா லேட்டா வர்றவங்க கிட்டே "ஏங்க லேட்ன்னு" கேட்டா "பஸ் லேட்" இல்ல "உடம்பு சரியில்ல" இப்படி எதாவது ஒரு காரணத்தை சொல்வாங்க. ஆனா, ஒரு குடும்பஸ்த்தர் மட்டும் "ஏங்க லேட்ன்னு" கேட்டா "கொஞ்சம் லேட்டாயிடுச்சி சார்" ன்னு சொல்வாரு. "என்னங்க, ஏன் லேட்டுன்னு கேட்டா, கொஞ்சம் லேட்டயிடுச்சின்னு சொல்றிஙகளே, ஏங்க லேட்" ன்னு மறுபடியும் கேட்டா”அதான் சொல்றேன்ல்ல சார் கொஞ்சம் லேட்டயிடுச்சி” அப்படின்னு சொல்வாரு. கடைசி வரைக்கும் லேட்டா வந்ததுக்கான காரணத்தை மட்டும் சொல்லவே மாட்டாரு.

எனக்கு அதோட அர்த்தம் கல்யாணம் ஆன பிறகு தான் புரிய ஆரம்பிச்சது. நானும் இப்பல்லாம் லேட்டா ஆபிஸ் போகும் போது ஏன் லேட்னு பாஸ் கேட்டா இந்த உண்மையான காரணத்தை சொல்ல முடியுமான்னு யோசிக்கிறேன்.

1. 6.30 மணிக்கு அலாரம் அடிக்கும் போது அலாரத்தை ஆப் செய்துட்டு இன்னும் அரை மணி நேரம் துங்குறேனே (இந்த அரை மணி நேரந்தாங்க சொர்க்கம்) அத சொல்ல முடியுமா?

2. எழுந்தப்பறம் 5 நிமிஷம் ஒரு மப்புல உட்கார்ந்து இருக்கிறேனே (இந்த சுகத்தை அனுபவிச்சாத்தான் புரியும்) அத சொல்ல முடியுமா?

3. பொண்டாட்டி கிட்ட காபி கேட்டா, ”இந்த காய கொஞ்சம் நறுக்கி கொடுங்க அதுக்குள்ள காபி கலந்து தரேன்”னு சொல்லி காய் கட் செய்து முடியிற வரைக்கும் காபிய கண்ல காட்டாம லேட் செய்றாளே (யப்பா, இதயெல்லாம் எந்த காலேஜ்ல சொல்லி தராங்கன்னு தெரியல) அத சொல்ல முடியுமா?

4. குளிச்சிட்டு வந்து ட்ரஸ் செய்ய பிரோவை திறந்தா பேண்ட்டுங்க மட்டும் அயர்ன் செய்துயிருக்க ஒரு அயர்ன் செய்த சட்டை கூட இல்லாம அந்த நேரத்துக்கு சட்டை அயர்ன் செஞ்சதை சொல்ல முடியுமா?

5. ட்ரஸ் செஞ்சிட்டு சாக்ஸை தேடினா ஒவ்வொரு ஜோடியிலும் ஒரு சாக்ஸ் மட்டும் இருக்க இன்னொரு சாக்ஸை தேட்றதை சொல்ல முடியுமா?

6. சாக்ஸை போட்டுட்டு ஷுவை போடலாம்ன்னு பார்த்தா, ஷுவை என் குட்டி பையன் போட்டுட்டு ஹால் பூரா சுத்திட்டு இருக்க அவன்கிட்ட தாஜா செய்து ஷுவை வாங்கி போட்ற்துக்கு கொஞசம் நேரம் ஆகுமே அத சொல்ல முடியுமா?

7. மொத நாள் சாயங்காலம் பெட்ரோல் போட மறந்து காலைல பெட்ரோல் போட க்யுவுல நின்னேனே அத சொல்ல முடியுமா?

ம்ம்... இப்பதான் புரியுது இப்படி ஒவ்வொரு செயல்லயும் கொஞ்சம் லேட்டாகவே தான் அவர் பொதுவா கொஞ்சம் லேட்டயிடுச்சின்னு உண்மைய சொன்னார்னு.

9 comments:

  1. late matter enakku maater illai, i am perfectionist

    ReplyDelete
  2. Dear Shar

    Hope you are not married. If married and still perfectionist then you are great

    ReplyDelete
  3. ஒரு ஆணோட கஷ்டம் இன்னொரு ஆணுக்குத்தான் புரியும்னு சொல்வாங்க. நன்றி திரு.அண்ணாமலையான்.

    ReplyDelete
  4. அத விடுங்க, ஆபீசுக்கு லீவு போட்டு, வீட்டுக்கு போலாமுன்னா உண்மய சொல்ல முடியுதா ?

    ReplyDelete
  5. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. உங்க பதிவு எல்லாம் படிச்சிட்டேன்.

    ReplyDelete
  6. நன்றி... அனமிகா துவாரகன்

    ReplyDelete
  7. சமையல் பண்ணி வச்சுட்டு ஆத்துக்காரிக்கு தோசை சுட்டு அடுக்கிட்டு வந்ததைத்தான் சொல்ல்ல்ல்ல முடியுமா

    ReplyDelete
  8. @goma //சமையல் பண்ணி வச்சுட்டு ஆத்துக்காரிக்கு தோசை சுட்டு அடுக்கிட்டு வந்ததைத்தான் சொல்ல்ல்ல்ல முடியுமா// அதானே...இது என்ன சின்னப் புள்ளத்தனமாயிருக்கு பொதுவா கொஞ்சம் லேட்டயிடுச்சின்னு சொன்னா புரிஞ்சிக்க வேண்டாமா...

    ReplyDelete

Leave your comments