சாப்பிடும் போது எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து தான் சாப்பிடனும் என்பது என்னோட விருப்பம். ஆனா எங்க வீட்ல அப்படி நடக்க மாட்டேங்குதுங்க. டைனிங் டேபில்ல சாப்பாடு பரிமாறினதும் எல்லோரும் அவங்க அவங்க தட்ட எடுத்துக்கிட்டு போய் டிவி முன்னாடி உட்கார்ந்துட்டு டிவி பார்த்துகிட்டே சாப்பிடறாங்க. கோபம் வந்து என்னைக்காவது சத்தம் போட்டா அடுத்த ரெண்டு நாளைக்கு எல்லாம் சரியாய் இருக்குது மூணாவது நாள் மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறின மாதிரி தட்ட தூக்கிட்டு டிவி முன்னாடி போய் உட்கார்ந்துகிட்டு டிவி பார்த்துகிட்டே சாபிடறாங்க . எங்க வீட்ல மட்டும் தான் இப்படி நடக்குதா? இல்ல எல்லோர் வீட்லயும் இப்படி தானா ? இதை எப்படி சரி செய்வது? கொஞ்சம் சொல்லுங்களேன்.
Friday, February 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Veettku veedu vasapadi.
ReplyDeleteGouuravama otalla kasukudhthu saappedarathu evalao meal.
இங்கேயும் அதே கத தான்...
ReplyDeleteசைபீரியா ஜெயிலா அது ? வீடு தானே ? வீடு என்பது இஷ்டத்துக்கு இருப்பது தானே ? ஏன் வீணான தேவையற்ற உப்பு சப்பில்லாத கட்டுப்பாடுகள் ?
ReplyDelete//சைபீரியா ஜெயிலா அது ? வீடு தானே ? வீடு என்பது இஷ்டத்துக்கு இருப்பது தானே ? ஏன் வீணான தேவையற்ற உப்பு சப்பில்லாத கட்டுப்பாடுகள் ?//
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் நன்றி திரு.செந்தழல் ரவி. கட்டுப்பாடு அல்ல ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டால் ஒரு சந்தோஷம் அவ்வளவு தான்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.அண்ணாமலையான்.
ReplyDeleteஐயோ! ஒங்க வீட்டிலுமா???
ReplyDeleteஎனக்கு தெரிஞ்சு எல்லார் வீட்லயும் இதே கதை தான்னு நினைக்கிறேன் திரு. யோகன். எப்ப டிவி வீட்டுக்குள்ள வந்ததோ அப்பவே நிம்மதி எல்லாம் போச்சு.
ReplyDeleteஒன்னு டீவி பாத்திட்ட பிறகு சாப்பிடணும். இல்லேன்னா சப்பிட்டுட்டு டீவி பாக்கணும். ஆனாலும், சாப்பாட்டு மேசையில் மனம் விட்டு கதைத்துக்கொண்டோ அல்லது நகைச்சுவையாக கதைத்துக்கொண்டோ சாப்பிட்டா டீவியின் பக்கம் பார்வை போகாது. கண்டிப்பாக இரவில் எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிடுவது உறவை பலப்படுத்தும்.
ReplyDelete//கண்டிப்பாக இரவில் எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிடுவது உறவை பலப்படுத்தும்//
ReplyDeleteசரியாக சொன்னீர்கள்... அனாமிகா துவாரகன்.
மிலிட்டரி டிசிப்ளின் எல்லாம் வீட்டுக்குள் கொண்டு வரக்கூடாது,ஒரு நாள் நீங்களும் எல்லோரும் போல் தட்டை எடுத்துக் கொண்டு டிவி முன் அமர்ந்து பாருங்கள்......சின்ன சந்தோஷம் பூக்கும் ...ஆனால் அதை நீங்கள்தான் ஈகோவோடு மறைப்பீர்கள்.
ReplyDeleteவீடு வீடாக இருக்கட்டும்
ஹாஸ்டல்,ராணுவ முகாம் என்ரு ஆக்க வேண்டாமே
@goma ஒரு மாதம் TV இல்லாமல் இருந்து பாருங்கள் வாழ்க்கையே இனிமையாக இருக்கும்
ReplyDelete