மீனின் கண்ணீர்
நீருக்குத்தெரியும்
ஆணின் கண்ணீர்
யாருக்குத்தெரியும்
அழுவதற்கும் வழியில்லா
அவல நிலை
இந்த ஆண்களுக்கு
தேக்கி வைத்த சோகம்
நெஞ்சில் சுமையாகும் பொழுது
அவன் அழுவதற்கு
ஆறுதலாய் அமைந்த இடம்
குளியலறை
குளியலறையில்
வழிந்தோடும் நீரில்
கரைந்தோடும் அவன் கண்ணீர்
ஆம்....
பாடல்கள் மட்டுமல்ல
சில நேரம்
ஆண்களின் அழுகையும்
குளியலறையில் அரங்கேறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
நெசம்தாங்க...
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.அண்ணாமலையான்.
ReplyDeleteஆண் அழக்கூடாது என்றும் அவன் அழுவது அடுத்தவருக்குத் தெரியக் கூடாது யார் சொன்னது.
ReplyDeleteசோகம் துக்கம் பகிர்ந்து கொள்ளத்தானே துணை...
@goma /சோகம் துக்கம் பகிர்ந்து கொள்ளத்தானே துணை... // உண்மைதான் கண்கலங்குவது வேறு உடைந்து அழுவது வேறு... இது இரண்டாவது
ReplyDelete