Wednesday, April 7, 2010
போலி மருந்து
காலாவதி ஆன மருந்து மற்றும் போலி மருந்து மூலம் கோடி கோடியா சம்பாரிச்ச கும்பல் ஒன்னு இப்ப போலிஸ்ல மாட்டி இருக்கு. போலிஸ்ல மாட்டின மீனாட்சி சுந்தரம் 20 வருஷமா இந்த வேலை செய்துட்டு வந்ததா சொல்றான்... இப்ப எப்படி மாட்டினானுங்கன்னு புரியல (தர வேண்டியத தரலையோ என்னவோ). மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிங்க எல்லாம் என்ன *** ###கிட்டு இருந்தாங்கன்னு தெரியல. நம்ம வரி பணத்தையெல்லாம் சம்பளமா குடுத்து இது போல தப்பு நடக்காம பாத்துக்க சொன்னா... போலி மருந்து பத்தி நாம எதாவது தகவல் கொடுத்தா சன்மானம் தரேன்னு சொல்றானுங்க மானங்கெட்டவனுங்க. நாம வாங்குற மருந்து போலியா ஒரிஜனாலான்னு நமக்கு பாக்க தெரிஞ்சா இவனுங்க எதுக்கு.
படிக்காத ஆட்கள் medical shop ல கொடுக்கிற மருந்த எதுவுமே பாக்காம வாங்கிட்டு போகும் போது... நான் என்னவோ பெரிசா படிச்ச பருப்பு போல Expiry date எல்லாம் பாத்து வாங்குவேன். ஆனா பழைய மருந்துக்கு புது லேபில் ஒட்டி ஏமாத்துவானுங்கன்னு நினைச்சுகூட பாக்கலை... மனுசங்க உயிரோட விளையாடுற போலி மருந்து கும்பலை மட்டும் கைது பண்ணா போதாது, கடமையை சரியா செய்யாத மற்றும் இதுக்கு துணையா இருந்த அதிகாரிகளையும் விடக்கூடாது.
லேபிள்கள்:
கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
போலி மருந்தினால் பாதிக்கப் படுவது பொது மக்கள் மட்டுமல்ல... அதிகாரிகளும், அவர்கள் குடும்பங்களும். இந்த விஷயம் கூட ஏன் அவர்களுக்கு புரியவில்லை என தெரியவில்லை.
ReplyDeleteஎல்லாம் பணம் செய்யும் வேலை. உங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி திரு.இராகவன் நைஜிரியா
ReplyDeleteநூறு ரூபாய் வாங்கி கொண்டு ஒட்டு போட்டுட்டு, நாடு எக்கேடு கெட்டான்னு ஜனங்க இருக்கிறதால இதெல்லாம் நடக்குதுனு நான் நினைக்குறேன்.
ReplyDeleteவாங்க சூனாபானா...படிச்சவங்க ஓட்டு போட போகாததும், யார் எக்கேடு கெட்டா நமக்கென்ன என்று இருப்பதும் ஒரு காரணம்.
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி.