சென்னை ரெட் ஹில்ஸ்லருந்து அம்பத்தூர் வரைக்கும் ஒரு லாரி ட்ரைவர் குடிச்சிட்டு 10 கிமீ தூரம் லாரி ஓட்டிட்டு வந்திருக்கான். வர்ர வழியெல்லாம் ஆளுங்க மேல வண்டிய ஏத்தியிருக்கான் மொத்தம் 15 பேர் மேல வண்டிய ஏத்தியிருக்கான், இதுல ஒருத்தர் பலியாகியிருக்கார் அவருக்கு 37 வயசுதான் அகுதாம். அவரோட மனைவி குழந்தைகளோட நிலமைய நினச்சா ரொம்ப கஷ்டமாயிருக்கு. இது போல குடிச்சிட்டு வண்டி ஓட்ற நாய்கள என்ன பண்ணலாம்?
சும்மா பைக்ல போறவங்கள குடிச்சிட்டு வண்டி ஓட்றாங்களான்னு செக் பண்றாங்க போலீஸ்காரங்க ஆனா TASMAC (Wine Shop) க்கு குடிக்க வர்ரவங்க நடந்தா வர்ராங்க? பைக்ல, லாரில, வேன்ல வந்து தான் குடிக்கிறாங்க. ஒரு நாள் ஸ்கூல் பஸ் ஓட்டிட்டு வந்த ட்ரைவர் பஸ்ஸ TASMAC பக்கத்துல நிறுத்திட்டு குடிச்சிட்டு போனான். அந்த பஸ்ல போற குழந்தைகள நினச்சி பாத்தா பயமா இருக்கு. போலீஸ்ல சொன்னா அவங்களுக்கு வருமானம் கிடைக்குமே ஒழிய நமக்கு ஒரு ப்ரயோஜனமும் கிடையாது. நிஜமாவே குடிச்சிட்டு வண்டி ஒட்டுறவங்கள பிடிக்கனும்னா TASMAC பக்கத்துல போலீஸ்காரங்க நின்னு செக் பண்ணனும். அப்படி பண்ணா வியாபாரம் பாதிக்குமே...என்ன செய்றது ஒன்னும் புரியல.
Sunday, May 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
//நிஜமாவே குடிச்சிட்டு வண்டி ஒட்டுறவங்கள பிடிக்கனும்னா TASMAC பக்கத்துல போலீஸ்காரங்க நின்னு செக் பண்ணனும். .///
ReplyDeleteஇது நல்லா இருக்கு..
கேட்கவே கொடுமயா இருக்குங்க...
ReplyDeleteயார் செத்தான் நமக்கென்ன... நம்ம மால் ஒழுங்கா வருதான்னு பார்க்கின்றாங்க அதான் இந்த கொடூரத்திற்கான காரணம்.
கேட்க நல்லாத்தான் இருக்கு நாடோடி சார் ஆனா செய்ய மாட்டானுங்களே.
ReplyDeleteசரியா சொன்னீங்க திரு.ராகவன். வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.
ReplyDeleteசட்டம் சட்டம் என்று பேசும் காக்கிகள் தங்கள் கடமையை செய்தால் போதும், தவறுகள் குறையும்.
ReplyDeleteவாவ். உங்கள் கோபம் எழுத்தில் தெரிகிறது. உண்மை தான். இவ்வளவு கொடுமை எங்கள் ஊரில் இருந்ததில்லை. இனி கேட்க யாருமில்லை என்று என்ன வேணுமானாலும் நடக்கலாம். பயமாக இருக்கிறது.
ReplyDelete//இவ்வளவு கொடுமை எங்கள் ஊரில் இருந்ததில்லை//
ReplyDeleteவாழ்த்துக்கள்... வருகைக்கும்,கருத்திற்க்கும் நன்றி. அனாமிகா துவாரகன்.
இந்த நாய்களுக்கெல்லாம் யாரு லைசன்ஸ் கொடுத்தா..
ReplyDelete@goma இன்னொரு நாய் தான்.
ReplyDelete