
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சராசரி ரசிகர்களுக்கு புரியாது என்றும் சில அறிவு ஜீவிகளுக்கு மட்டும் தான் புரியும் என்றும் சிலர் தங்களை தாங்களே மேதாவி ஆக்கி கொள்கிறார்கள். மேலும் குமுதம் விமர்சனத்திலும் "ஆயிரத்தில் ஒருவன் சராசரி ரசிகர்களுக்கு புரியாத புதிர்" என்று எழுதியிருக்கிறார்கள். ஒரு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் நன்றாக இருக்கிறது அல்லது நன்றாக இல்லை, சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது என்றால் சரி ஆனால் அது என்ன சராசரி ரசிகர்களுக்கு புரியாது? திரைக்கதை தெளிவில்லாமல் சில இடங்களில் திரைப்படம் பார்ப்பவர்கள் கதையை யூகிக்கும் வண்ணம் திரைப்படம் அமைந்து இருக்கிறது என்பதே உண்மை. ஒரு இயக்குனர் தான் சொல்ல நினைதததை அனைவர்க்கும் புரியும் வண்ணம் சொல்வது அவரது திறமை, அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன் அமையவில்லை.