கல்யாண ரிசப்ஷனுக்கு சீக்கிரமா போனா ஒரு அனுபவம், லேட்டா போனா வேற அனுபவம். போன வாரம் தொடர்ந்தாப்போல ரெண்டு கல்யாண ரிசப்ஷனுக்கு போக வேண்டியிருந்தது. மொத நாள் கல்யாண ரிசப்ஷனுக்கு குடும்பத்தோட மாலை 7 மணிக்கெல்லாம் ரிசப்ஷனுக்கு போயிட்டேன் மாப்பிள்ளையும் பொண்ணும் லேட்டா வந்ததால அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இன்னிசை என்ற பேர்ல காதை செவிடாக்கி கொண்டிருந்தார்கள்.
மாப்பிள்ளையும் பொண்ணும் வந்த பிறகு அவங்களை வாழ்த்துறதுக்கு ஒரு பெரிய க்யுல நின்னு அவங்களை வாழ்த்திட்டு சாப்பிட போனா அங்கேயும் ஒரு க்யு. சரி வெய்ட் பண்ணி இடத்த பிடிச்சி சாப்பிட உட்கார்ந்தா அடுத்த பந்திக்கு காத்திருக்கிற ஆள் என் சேருக்கு பின்னே நின்னுட்டு எப்ப எழுந்திருப்பேன்னு நான் சாப்பிடறதயே பாத்திட்டு இருக்காரு. வேகமா சாப்பிட்டும் சாப்பிடாமலும் எழுந்து வந்தேன் இல்லேன்னா பின்னாடி நின்னு பாத்திட்டுருந்த ஆள் சாப்பிட்டது போதும் சீக்கிரம் எழுந்துருங்கன்னு சொன்னாலும் சொல்லியிருப்பார்.
சீக்கிரமா போனா இப்படி இருக்கேன்னு மறு நாள் போன கல்யாண ரிசப்ஷனுக்கு லேட்டா 9 மணிக்கு போனேன். கூட்டம் இல்லாமல் இருந்தது, எப்படி என் புத்திசாலிதனம்னு பொண்டாட்டிய ஒரு பார்வை பாத்திட்டு ரிலாக்ஸ்டா மணமக்களை வாழ்த்திட்டு சாப்பிட போனா வெறும் சாம்பார் சாதமும் தயிர் சாதம் மட்டும் இருந்தது மற்ற அயிட்ட்மெல்லாம் காலியாயிடுச்சாம். என் பொண்டாட்டி என்ன ஒரு பார்வை பாத்தா பாருங்க.... இப்பல்லாம் கல்யாண ரிசப்ஷனுக்கு போகிறதுக்கு ரொம்ப டென்ஷனாயிருக்கு.
Sunday, June 27, 2010
Subscribe to:
Posts (Atom)